பொன்விழா ஆண்டில் ஆட்சியைப் பிடிக்கும் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாகக் கடிதம்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகலும் தேர்தல் பணிகளுக்காகத் தயாராகிவிட்டனர்.
இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க கட்சியின் தொண்டர்களுக்கு அக்கட்சியில்ன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் அக்கட்சியின் துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், அடுத்த வருடம் (2021) நடைபெற்றவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இன்றிலிருந்து தொண்டர்கள் பணிகளைத் தொடங்குமாறும் அதில் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கட்சியின்49 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு அக்கட்சியினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் பணிகளை இன்றே தொடங்குமாறும்…பொன்விழா ஆண்டில் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.