திண்டுக்கல்லில் அன்னதானம் சாப்பிட வந்த பெண்களை அதிமுகவில் இணைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் :
திண்டுக்கல் செட்டிநாயக்கன் பட்டியில் அதிமுக சார்பில் கடந்த புதன் கிழமை அன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 500 மாற்று கட்சியினர் இணைதல் நிகழ்வானது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாற்றுக்கட்சியினர் 500 பேர் அதிமுகவில் இணைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் உள்கட்சி அதிமுக தொண்டர்கள் மட்டுமே அதிகளவில் இருந்தனர்.மாற்று கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் குறைவாகவே காணப்பட்டனர்.
Read more – குழாய் அடி சண்டையாகும் கூவத்தூர் மேட்டர்.. வாய்விட்டு கதறிய சி.வி.சண்முகம்.. துணிந்து நிற்கும் டிடிவி
இந்தநிலையில், மேடையில் மாற்று கட்சியினரை சார்ந்த 500 பேரை கணக்கு கட்டுவதற்காக அதிமுக குழு உறுப்பினர்கள் அங்கு சாப்பிட வந்த பெண்களை மேடை ஏற்றி இணைய வந்தவர்கள் என அறிவித்தனர். மேலும், அந்த புதிய உறுப்பினர்களுக்கு அமைச்சர் சீனிவாசன் வேட்டி, சேலைகளை வழங்கிய போது, அதை பெறுவதற்கு கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.




