நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன இதனால் கொரோனா நோயின் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கியது முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் 114 பெண் வேட்பாளர்கள் உள்பட சுமார் 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அதனால் இந்த முறை எதிர்பார்த்ததை விட தேர்தல் செலவினங்கள் அதிகரிக்கும் என முன்னரே தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.