மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பயணம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னை :
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை கொளத்தூரில் இலட்சிய தலைவரின் எழுச்சி நாள் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் பொதுசெயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில்,
ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் தமிழக முதல்வராக அமரப் போகிறார் அவருக்கு இந்த ஆண்டு கழகத்தலைவர் தளபதிக்கு பிறந்தநாள் அடுத்த ஆண்டு தமிழகத்தின் முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். இந்த பெருமை ஒரே நாளில் கிடைத்தது அல்ல மாற்றுக் கட்சியினரும் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்று தெரிவித்தார்.
எத்தனையோ முறை பா.ஜ.கவினர் இவரை அடிபணிய முயற்சி செய்தபோதும், விடாமல் போராடி வெற்றிகொண்டவர் ஸ்டாலின். இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரை ஸ்டாலினை தவிர வேற எவரும் அந்த அளவிற்கு விமர்சனம் செய்து இருக்கமாட்டார்கள் என்றார்.
Read more – தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி.. யாருக்கு கழறப்போகிறது வேட்டி.. எல்.கே. சுதீஷின் இணையதள பதிவு
மேலும், என்னோடு தோழனாக இருந்த ஸ்டாலின் இப்போது எனக்கு தலைவாகி இருக்கிறார். நேற்று கலைஞர் அமைச்சரவையிலும் இருந்தேன், நாளை மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன். அடுத்து உதயநிதி அமைச்சரவையில் இருப்பேன் என்று திமுக தொண்டர்கள் முன்னிலையில் உருக்கமாக பேசியுள்ளார்.