எனக்கு நன்றி சொல்லும் எத்தனை நபர்களை கைது செய்வீர்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை :
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110 ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் பயிர் கடன் ரத்து செய்ததற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தான் என்ற பேச்சும் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
இதையடுத்து, கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து விவசாய சங்கங்களை சார்ந்த தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். தற்போது காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு பல்வேறு கிராமப் பகுதிகளில் இடங்களைத் தேர்வுசெய்து, JCB இயந்திரம்கொண்டு இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் என்பவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
Read more – பாமக கட்சிக்கு தேவை நோட்டு.. எங்களுக்கு தேவை சீட்டு.. அதிமுகவிற்கு ஆர்டர் போடும் பிரேமலதா
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; கடன் தள்ளுபடிக்காக என்னை சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பதால் நியாயமான கோரிக்கைக்காக போராடிய இளங்கீரனை, அராஜகமாக கைது செய்திருக்கிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை!
எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?
அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல! பழனிசாமிதான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.




