விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பயணத் திட்டத்தின் கீழ் இன்று மூன்றாவது நாளாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் கல்லூரி பொதுமக்களை சந்தித்து உரையாடி அவர் வள்ளியூர் திருச்செந்தூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார்
அப்போது அந்த பகுதி மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகவும், இதற்கான மாற்று பாதையும் சரிவர அமைத்துக் கொடுக்கவில்லை என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாலப் பணிகள் நடந்து வரும் பகுதியிலேயே அனைத்து கட்சியினர் சார்பில் திண்டுக்கல் லியோனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் கலந்து கொண்டவர்கள் பாலப் பணி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த பாலம் பணிகள் தாமதம் காரணமாக இந்த பகுதி மக்கள் போக்குவரத்திற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனவே இன்னும் பத்து தினங்களுக்குள் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் மக்கள் பயன்பாட்டிற்கான மாற்றுப் பாதையை அமைத்து தர வேண்டும் இல்லை என்றால் தலைமை கழகத்தின் அனுமதி பெற்று தனது தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டி இங்கு மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.