சென்னை வடக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகரை மாற்ற வேண்டும் என திமுகவினர் போர்கொடி எழுப்பியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் கடந்த வாரம் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. அப்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. மீது திமுக நிர்வாகிகள் கொதித்துபோய், ஆ.ராசா முன்னிலையில் சரமாரியான புகாரினைத் தெரிவித்துள்ளனர். அப்போது புகாராக எழுதிக் கொடுங்கள் தலைமையிடம் இவற்றை சொல்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை பெரம்பூர் தொகுதி திமுக நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்.டி சேகர் மீது தனி தனியே புகாரினை எழுதி கொண்டு ஆ.ராசாவிடம் கொடுத்துள்ளனர். அதில் கட்சி நிர்வாகிகளுக்கு ஆர்.டி.சேகர் முக்கியத்துவம் தருவது இல்லை எனவும், கண்ணியத்துடன் நடந்து கொள்வதில்லை எனவும் நிர்வாகிகளை மட்டந்தட்டி பேசுவது, அவமரியாதையுடன் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் எனவும் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை ஒன் டூ ஒன் சந்தித்து பேசிய ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சிலரும் ஆர்.டி.சேகரை மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




