மனுஸ்மிருதி என்ற நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று திருமாவளவன் எம்பி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது,
மகளிரையும் மனிதகுலத்தையும் இழிவுபடுத்தி உரைக்கும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். மகளிரை இழிவுபடுத்திப் பேசியதாக அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறாக சித்தரிக்கின்றனர்.
பெண்களை நான் இழிவுபடுத்திவிட்டாக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். இணையவழி கருத்தரங்கில் 40 நிமிடம் ஆற்றிய என் உரையிலன் 40 நொடி காணொளியை மற்றும் துண்டித்து எனக்கெதிராக சனாதள சக்திகள் திரித்து வெளியிட்டுள்ளன.
நான் பேசிய முழுமையான பேச்சை பெண்கள் கேட்க வேண்டும். அவர்களின் நோக்கம் என்னை விமர்சிக்க வேண்டும் என்பதல்ல. திமுகவில் அங்கம் வகித்து இருக்கும் பலமான கூட்டணிய உடைக்க வேண்டும் என்பதே. திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி சுமத்துகின்றனர். இதை ஒரு அரசியல் சக்தியாக இதை பயன்படுத்தி திமுகவிற்கு நெருக்கடியை கொடுக்க முயல்கின்றனர் என்று கூறினார்.அது ஒரு போதும் பலிக்காது என அவர் கூறினார்.