ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி, திமுக வேட்பாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் வாக்களித்துள்ளனர்.
11 மணி நிலவரப்படி 26.03 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகிறது.




