எளிய மக்கள் பாதிப்படைவதைத் தவிர்க்க ரிசர்வ் வங்கியின் புதிய நகல்களை திரும்பப் பெற வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய நிதியமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் அவர் அளித்த மனுவில், ரிசர்வ் வங்கியின் புதிய நகல் விதிமுறைகள், ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலையின்மை, குறைந்த வேலை, விவசாயத்திற்கும், சிறு குறு நடுத்தர தொழில்களுக்கும் ஆதரவின்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள, சாமானிய மக்களின் வாழ்க்கையில் மேலதிக துயரங்களை கொண்டு வந்து சேர்ப்பதாகும். அனைத்து எதிர்மறை நிபந்தனைகளும் திரும்பப் பெறப்படா விட்டால் அவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்படுவதோடு, கந்துவட்டிக்காரர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள் ஆகியவற்றை நோக்கித் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரு புறம் அதீத வட்டி விதிப்பதோடு, மறுபுறம் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை சற்றும் லட்சியம் செய்யதவை ஆகும். ஆகவே தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, அனைத்து எதிர்மறை நிபந்தனைகளையும் திரும்பப் பெறுமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார்.





