Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

“ஜெயலலிதா மருத்துவமனைக்கு அனுமதிக்க அழைத்து வரும்போது மயக்கநிலையில் மட்டுமின்றி காயங்களுடன் இருந்தார்”- அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அப்போலோ

October 28, 2021

ஜெயலலிதா மரண வழக்கில் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே, ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என்று எப்படிச் சொல்ல முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் முன் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பெரியார், அண்ணா குறித்த சர்ச்சை வீடியோ – ஓபிஎஸ் கண்டனம்

முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை… மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் அப்பல்லோ

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சமயத்தில் அதிமுக அரசு சொல்லிதான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன என்று கூறி அப்போலோ நிர்வாகம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு ஜெயலலிதா மருத்துவமனைக்கு அனுமதிக்க அழைத்து வரும்போது மயக்கநிலையில் மட்டுமின்றி காயங்களுடன் இருந்தார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் வழக்கு இரண்டாவது நாளாக நேற்று (அக்டோபர் 27) நீதிபதி அப்துல் நசீர் மற்றும் நீதிபதி கிருஷ்ணமுராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆஜரானார்.

அவர் தன் வாதத்தில், ஆறுமுகசாமி ஆணையம் அனைத்து விசாரணையையும் முடித்த பின்பு முதலில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதுவும் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முழுமையாக அரசால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகுதான் பொதுவெளியில் வெளியிடப்படும். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என்ற அப்போலோ மருத்துவமனையின் குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும். இது போன்ற வாதங்களை தற்போது நீதிமன்றத்தில் முன்வைப்பது வழக்கைத் திசை திருப்பும் நடவடிக்கையாகும்.

முதலில் ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று அப்போலோ சார்பில் கேட்கப்பட்டது. இப்போது ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என்று கூறுகிறது. இந்த விவகாரத்தில் அப்போலோவின் பதில்கள் எல்லாம் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது.

குறிப்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு விசாரணைக்கு ஆஜரான பின்னர்தான் அப்போலோ சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அப்போலோ மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என விசாரணை முடியும் முன்பே நீங்கள் எப்படிக் கூற முடியும். ஆணையம் தனது விசாரணையை நடத்தி முடித்து அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகுதான் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

அப்போதுதான் ஒருதலைபட்சமென்ற விவகாரத்தைக் கொண்டுவர முடியும். எனவே மருத்துவமனை தரப்பில் இப்போதே ஒருதலைபட்சம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கணவனால் கைவிடப்பட்டு தனியே வசிக்கும் பெண்களுக்கு ரேஷன் கார்டு!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

Next Post

IIT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவனுக்கு முதலமைச்சர் கொடுத்த சர்ப்பிரைஸ்!!

Next Post

IIT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவனுக்கு முதலமைச்சர் கொடுத்த சர்ப்பிரைஸ்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version