சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரியில் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் காஞ்சியிலிருந்து தொடங்க உள்ளார் மு.க.ஸ்டாலின். மேலும் இன்று திமுக கட்சியின் இளைஞரணி தலைவரான உதயநிதி தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து கனிமொழிழும் வரும் 29 ஆம் தேதி பிரச்சாரம் செய்யபோகிறார்.
இத்தனை ஆண்டுகள் தந்தையுடன் அறிவுரைகளை பெற்று அரசியலில் தனக்கென்ன ஒரு இடம் பிடித்த ஸ்டாலின் அவர்கள் இந்த முறை தந்தையின் ஆசியுடன் தேர்தலில் களம் இறங்குகிறார். இந்த முறை எப்படியாவது திமுகவின் கோடியை சட்டசபையில் ஊன்றவேண்டும் என்பதற்காக திமுகவும், திமுகவின் தொண்டர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதனில் முதல் படியாக இந்த சட்டசபை பிரச்சாரம். இதனை கூடியவிரைவில் தொடங்கி மக்களின் எண்ணங்களில் வேரூன்றவே ஜனவரி முதல் திமுகவின் பிரச்சாரங்கள் தொடங்கவுள்ளது.

தன் சட்டசபை தேர்தலை ஜனவரி 5 ல் இருந்து தொடங்க திட்டமிட்ட மு.க. ஸ்டாலின் பொங்கலுக்கு பின் தொடர்ந்து முழுமூச்சாக மேற்கொள்ள உள்ளார்.




