எம்.ஜி.ஆரை சீமான் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலளித்து எம்.ஜி.ஆர் செய்வதற்றை பட்டியலிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி ரஜினி, கமல் அரசியல் செய்யும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்.ஜி.ஆரைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவுக்குத்தான் வாக்காகச் சேரும் என்றார்.
மேலும், அவர் பிரபாகரனை ஆதரித்ததாலும், ஈழ விடுதலைக்கு ஆதரவு தெரிவித்ததாலும் எம்.ஜி.ஆர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. மற்றபடி அவர் என்ன சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். தமிழ் மொழி கல்வியில் இருந்து ஆங்கில மொழி கல்வியாக மாற்றினார் என்று குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர்கள், ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். எம்.ஜி.ஆரை ஒரு சிலர் குறை கூறியதாக கேள்விப்பட்டேன். தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் துவங்கியவர் எம்.ஜி.ஆர்தான். மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தியவர் அவர் என்று குறிப்பிட்டார்.
read more: முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம்: மீண்டும் எல்.முருகன்
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை சட்டமாக்கினார். பசித்த வயிறுக்கு சோறிட்டார். சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அரண் அமைத்துத் தந்தவர் எம்.ஜி.ஆர் என்பதை சரித்திரம் மறைக்க முடியாது என்ற வைகோ, “எம்.ஜி.ஆர் செய்ததை வேறொருவர் செய்ய முடியாது” என விளக்கினார்.