பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிஜி நாட்டின் பிரதமருடன் சந்திப்பு நிகழ உள்ளது.
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியுடன் 1879ம் ஆண்டு முதல் இந்தியா வர்த்தகம் நடத்தி வருகிறது. கடல் சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கான முக்கிய நாடாக பிஜி தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி லிககமடா ரபுகா மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிஜி பிரதமர் சிதிவேனி லிககமடா ரபுகா சந்தித்து இருதரப்பு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பது, புதிய முதலீடுகளை ஊக்குவிப்பது உள்ளிட்டவையும் பேச்சு வார்த்தையில் இடம் பெறுகிறது. இந்தியாவிற்கான பாதுகாப்பில் முக்கிய அங்கமாக தெற்கு பசுபிக் பெருங்கடலில் பிஜி அமைந்துள்ள நிலையில் பாதுகாப்பு ரீதியிலான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். பிஜி நாட்டு பிரதமரின் 3 நாள் பயணத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி பிஜி நாட்டின் பிரதமர் மற்றும் அவரது குழுக்களுக்கு இன்று விருந்தளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும் பிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி லிககமடா ரபுகா சந்திக்கவுள்ளார்.




