பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்தார்.
கோவையை அடுத்த தேவராயபுரத்தில் அதிமுகவின் மாபெரும் கிராம சமத்துவ பொங்கல் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பொங்கல் திருவிழாவில் 1008 புதுப்பானைகளில் பெண்கள் பொங்கலிட்டு பண்டிகையை கொண்டாடினர். சிலம்பாட்டடம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
உழவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்,,,பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.