புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் அமைச்சர்கள் முழுவதும் ராஜினாமா செய்ய முடிவு எடுத்து இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஜான்குமார் என்று ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயரிடம் வழங்கினார். அதேபோல் நேற்று நேற்று மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்த நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகிய எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. மேலும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் இருப்பதால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.
Read more – சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் 2009 ல் பெற்ற வெற்றி உறுதி… உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி…
இதுகுறித்து, புதுச்சேரி நலத்துறை அமைச்சர் கந்தசாமி கூறியதாவது,’ மத்திய பாஜக மற்றும் அரசும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். ஆளும் பாஜக அரசு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலமாக மாநில உரிமைகளை தடுத்து நிறுத்தி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக தலைமை மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.