லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஜீஸ் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும், அதனால் ஏற்பட்ட வன்முறையில் மொத்தமாக 8 பேர் உயிரிழந்தனர்.
இவை மனித உரிமை மீறல் என கூறி நாட்டில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கண்டன குரல் வலுக்க தொடங்கியது. இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 11ம் தேதி “முழு அடைப்பு” பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் அரசியல் கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்புக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
முழு அடைப்பு அன்று அத்தியாவசிய சேவைகள் எதுவும் பாதிக்காது எனவும் மாநில அரசு சார்ப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.



