விடுதலையில் நியாயமும் தர்மமும் உள்ளது என்று பேரறிவாளன் விடுதலைக்கு நடிகர் பார்த்திபன் குரல் கொடுத்துள்ளார்.
பேரறிவாளனை விடுவிக்க குரல் கொடுக்கும் விதமாக இணையத்தில் பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ‘ரிலீஸ் பேரறிவாளன்’ என்ற ஹாஷ்டாக் கொண்ட பாடல் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் தன் மகனை இந்த முறையாவது விடுதலை செய்யவேண்டும் என பேரறிவாளனின் தாயார் கண்ணீர் மல்க கூறியது அனைவரது மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் விடுதலையில் நியாமமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி தானும் போராடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் குறிப்பிட்டது யாதெனில் அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.