ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் வந்த நிலையில், சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து நேரலையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. மேலும் செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை புரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது





