ரஜினி மீதான முரண்பாடு நீங்கியது என சீமான் கூறியதற்கு ராகவா லாரன்ஸ் என்ன சொல்லப் போகிறார்?
ரஜினி மீதான முரண்பாடு நீங்கியது என சீமான் கூறியதற்கு ராகவா லாரன்ஸ் என்ன சொல்லப் போகிறார்?
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது ஆன்மிகம் அரசியல் என்பதை அறிவித்தார்.
இதற்குச் சில எதிர்ப்புகளும், ஆதரவுகளும் பெருகின.
ஆனால் அடுத்தடுத்த தம் அரசியல் பணிகளைச் செய்யாமல் மேற்கொண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினி.
ஆனால் ரஜினி மராட்டியர், கன்னடர் என்று சீமான், உள்ளிட்ட பலரும் கூறி வந்த நிலையில் அவர் முதல்வராவதற்கும் சிலர் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ரஜினி தனது தொண்டர்களை அழைத்துப் பேசியபோது, தான் முதல்வர் வேட்பாளராக நிற்கவில்லை என்றும் வேரு யாரையாவது நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்?
அவரது கருத்துக்கு ரஜினி மன்றத்தினர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் இதுநாள் வரை ரஜினியின் அரசியல் வருகையை எதிர்த்து வந்த சீமான், தற்போது அவர் மீதான் முரண்பாடு நீங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் கூறியுள்ளதாவது:
ரஜினி வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதாகக் கூறியவுடன் அவர் மீதான முரண்பாடு நீங்கியது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆரம்பத்திலிருந்து ராகவா லாரன்ஸிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், எதிர்ப்பு அரசியலையும் வெறுப்பு அரசியலை தனக்கு வேண்டாம் எனவும் ரஜினியின் ஆன்மிக அரசியல் பாதையில் செல்லப்போவதாக லாரன்ஸ் கூறினார்.
இந்நிலையில் ரஜினி மீதான முரண்பாடுகள் நீங்கியதாக சீமான் கூறியுள்ள நிலையில் வரும் தேர்தலை முன்னிட்டு சீமான் இந்தக் கருத்தைக் கூறினாரா என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்தக் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியில் உள்ள மற்ற தொண்டர்களும், ராகவா லாரஸும் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியிலிருந்து இருமுக்கிய பிரமுகர்கள் நீங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.