தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோன தொற்று காரணத்தினால் அணைத்து இடங்களும் மூடப்பட்டது. தற்போது அனைத்தும் திறக்கப்பட்டு சில தளர்வுகளுடன் தமிழகம் இயங்கி வருகிறது. ஆனாலும் இன்னும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பவில்லை. ஆயினும் அணைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களும் பீஸ் கலெக்ட் செய்து வருகின்றது அதனால் கல்வி நிறுவனங்களை சீக்கிரத்தில் திறக்கவேண்டும் என கூறி வருகின்றனர். மாணவர்களின் படிப்பை கரத்தில் கொண்டு ஒன்லைன் வகுப்புகள் முந்தைய அளவிற்கு பயனுள்ளதாக இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9 – 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. அனால் பல மாநிலங்களில் அப்பள்ளிகள் மீண்டும் தீர்க்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது” என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் ஆந்திராவில் பள்ளிகள் திறந்தபின்னர் கொரோன தொற்று அதிகரித்தது அதனால் தமிழகத்தில் கொரோன தொற்று குரைத்தவுடன் தான் பள்ளிகள் தீர்க்கக்கூடும் என கூறியுள்ளார்.