அதிமுக கட்சி ஒருநாள் சசிகலா கைகளில் சேரும் என்று சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருச்சி :
திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, காங்கிரஸ் கட்சியில் எந்த தொண்டர் எந்த கட்சிக்கு போனாலும் வருந்தத்தக்கது தான். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிராக இருக்கும் பா.ஜ.கவில் இணையும் போது தான் அவர்கள் இதுவரை எந்த கொள்கை பிடிப்போடு இருந்தார்கள் என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அதிமுக அரசு வழங்கிய விவசாய பயிர்க்கடன் ரத்து குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம்தான் சேரப்போகிறது என்றும் கூறினார்.
தற்போது, அதிமுகவில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சசிகலாதான் நியமித்தார். அவ்வளவு ஏன் முதலமைச்சரையும் அவர்தான் கொண்டு வந்தார். ஆகையால் சசிகலாவிடம் அதிமுக செல்வது இப்போதா? அல்லது தேர்தல் தோல்விக்கு பிறகா ? என்பது விரைவில் தெரியும் என்றார். மேலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சசிகலாவின் ஜாதி பற்றி பேசியது வருந்தத்தக்கது என்றும், இந்தியாவில் ஜாதி மிகப்பெரிய தரும் தெரிவித்துள்ளார்.




