வானவில் மையத்தின் அழைப்பு ரஜினிகாந்திற்கும், பா.ஜ.க.விற்கும் இடையேயான நெருக்கத்தை காட்டுகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் பங்கேற்றார், முன்னதாக, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வேளாண் சட்டம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதத்தில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை. வரும் 16ம் தேதி ஜெய்ப்பூர், புதுடெல்லி சாலைகளை மறித்து புதுடெல்லிக்கு வருவதைத் தடுப்போம் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
நெருக்கம்
பா.ஜ.க. அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளதை வி.சி.க. ஆதரிக்கிறது. அந்த வகையில் வி.சி.க. சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.
வானவில் மையம் நடத்தும் கலை, பண்பாட்டுத் திருவிழாவுக்கு ரஜினிகாந்துக்கு பா.ஜ.க. அரசு அழைப்பு விடுத்திருப்பது அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.