தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது என மத்திய போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்காரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது சாலை விபத்துகள் குறைந்துள்ளது. அதனை குறித்து மத்திய போக்குவரத்துக்கு அமைச்சர் நித்தின் கட்காரி கூறியுள்ளார். தமிழத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதலே தான் இப்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார் நித்தின். தில்லியில் இருந்தவாறே காணொளி வாயிலாக ஆந்திராவில் நித்தின் கட்காரி மாநிலத்திற்கான சாலை மேம்பாட்டு திட்டங்களை இவர் விவரித்துள்ளார்.
அதை தொடர்ந்து அவர் பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 5 லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இதில் 1½ லட்சம் பேர் வரை உயிரிழக்கிறார்கள். 2½ லட்சத்தில் இருந்து 3 லட்சம் பேர் காயம் அடைகிறார்கள். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 62 சதவீதம் பேர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். விபத்துகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. சாலை விபத்துகளை குறைக்க எனது அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் நாட்டில் விபத்துகளை குறைக்க முடியவில்லை.
ஆனால் தமிழகத்தில் சாலை விபத்துகள் 29 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல உயிரிழப்புகளும் 30 சதவீதம் குறைந்துள்ளது. இது பாராட்டுக்குரியது. பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலமும் போலீஸ் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமும் விபத்துகளை குறைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.




