தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை, மாலை என இரு வேளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. வருகிற 13-ஆம் தேதியுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய உள்ள நிலையில், அவை நடவடிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூட்டப்பட்டு, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.
நாளை காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவிருக்கும் நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்குப் பின்பு 13-ஆம் தேதியும் விவாதம் தொடரும் என்றும் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
13 ஆம் தேதியுடன் அவை முடிவடையும் நிலையில், அன்றைய தினம், கேள்வி நேரம் கிடையாது எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.