நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது. அதன்பிறகு நடைபெற வேண்டிய குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெறவேயில்லை. இந்த நிலையில் வரும் ஜனவரி 29ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுகிறது.
முதல்கட்டக் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடக்கிறது. கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பு நடைபெறும் அல்வா தயாரிக்கும் நிகழ்வு கொரோனா பரவல் காரணமாக ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
அதேபோலவே பட்ஜெட் தயாரிக்கும் அச்சகத்தில் குறைந்தது 100 பேர் வரை பணியாற்ற வேண்டும். அச்சகத்தில் ஊழியர்கள் அதிகமாக பணியில் ஈடுபட்டால் அது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். இதனால் மத்திய பட்ஜெட் அறிக்கை பிரிண்டிங் செய்யப்பட மாட்டாது என்றும், டிஜிட்டல் முறையில் பயன்படுத்த இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
read more: கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள்: உதயநிதி போடும் தடை!
அதாவது இந்த முறை பட்ஜெட் அனைத்தும் ஸ்மார்ட் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. எம்.பி.க்கள் யாருக்கும் பட்ஜெட் நகல்கள் மற்றும் பொருளாதா அறிக்கை நகல்கள் வழங்கப்படாது. அவர்களுக்கு அனைத்தும் ஃசாப்ட் காப்பியாக அனுப்பி வைக்கப்படும்.




