கட்சியில் ஒருவர் தவறு செய்து இருந்தால் நிச்சயம் பாஜக அவர்களை ஒருபோதும் பாதுகாக்காது – வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி
ஆரோக்கியமான பெண்கள்! ஆரோக்கியமான இந்தியா! எனும் திட்டத்தின் தொடக்க விழா டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் பேசியதாவது, உத்திரபிரதேசத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதனை அரசியலாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் துடிக்கிறார்கள்! ஏன் காங்கிரஸ் ஆளக்கூடிய பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லையா? என கேள்வி எழுப்பிய வானதி ஒருகட்டத்தில் உ.பி-யில் ஆட்சியின் இருந்த காங்கிரஸ் இப்போது எங்கு இருக்கிறது என தேட வேண்டிய நிலை உள்ளதால் அரசியலாக்க துடிக்கிறார்கள் என்றார்.
மேலும், ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்காக விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ள நிலையில் நீதிமன்றத்தையும் பாராளுமன்றதையும் விவசாயிகள் மதிக்கவில்லையா ? என கூறினார். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை , கட்சியில் உள்ள எவரேனும் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி நிச்சயம் அவர்களை பாதுகாக்கது எனவும் உ.பி சம்பவத்தில் அம்மாநில போலீசார் அவர்களது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், உள்துறை இணை அமைச்சரை பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள், முதலில் உண்மை நிருபிக்கப்படட்டும் அதன் பின்னர் பதவி விலக கோரட்டும் என்றார்.