மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மத்திய அரசின் ஆன்லைன் திறனறிவு தேர்வில், தமிழ்மொழி புறக்கணிப்பட்டுள்ளது ஏன்?
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மத்திய அரசால் ஒன்லைன் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தேர்வுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது வெகு நாட்களாக நடந்து வருகிறது.
பல போராட்டங்கள் நடந்த போதும் இது மாறாமல் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. இப்போது மீண்டும் இந்த ஒன்லைன் திறனறிவு தேர்வில் தமிழானது புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த எம்.பி. சு.வெங்கடேசன், தமிழ் புறக்கணிக்கப்பட்டது என் என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் KVPY எனும் அறிவியல் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
என் இந்த தேர்வு , இதனால் பயனடையும் வாய்ப்பும் தமிழ் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,12,000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது தமிழ் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்ட வேண்டும். மேலும் இந்நிலையில் இந்த தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்திட வேண்டும் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்-கிற்கு, மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அறிவியல் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.