
உலகின் பல இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு வியப்பூட்டும் விதமாகவும் மர்மம் நிறைந்ததாகவும் இருந்து வருகிறது. அதில் ஒன்றாக இருக்கிறது Oxford பல்கலைக்கழகத்தின் Clarendon ஆய்வகத்தில் இருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. தொழில்நுட்பம் முன்னேறியுள்ளதாகக் கருதப்படும் இக்காலத்திலேயே ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் சார்ஜ் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் Oxford பல்கலையில் உள்ள இந்த எச்சரிக்கை மணியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 175 ஆண்டுகளாக தொடர்ந்து இடைவிடாமல் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்ததெல்லாம் அது 1940ம் ஆண்டில் பொருத்தப்பட்டது என்பது மட்டும் தான். எப்படிப்பட்ட அறிவியல் விதிகளுக்கு கீழ் செயல்படுகிறது என்பதை அறிந்தாலும் அந்த எச்சரிக்கை மணியை பிரித்து பார்க்க ஆய்வாளர்கள் விரும்பவில்லை. இவர்கள் கையாள்வதன் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதை தவிர்க்கின்றனர்.
இதுநாள் வரை கிட்டத்தட்ட 10பில்லியன் முறை அதாவது ஆயிரம் கோடி முறைக்கு மேல் இந்த மணி ஒலித்திருக்கும் எனவும் அதில் DRY PILE எனப்படும் ஒருவகை ஆரம்பகாலத்தைச் சேர்ந்த பேட்டரி பயன்பத்த பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர். இரண்டு பித்தளைக் குழல்கள் ஒலியெழுப்பப் பயன்படுத்தப்படுகின்றன. அதில் பயன்படுத்தப்படும் பேட்டரி Dry Pile என்றழைக்கப்படுகிறது. Alassandro volta என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. Zinc மற்றும் Copper ஆகிய உலோகங்களை மின்முனையங்களாகக் கொண்டு செயல்படுகிறது. முற்றிலும் வேதிப் பொருட்களின் உதவியாலேயே மின்சாரம் உருவாக்கப்படுகிறது. Zinc மற்றும் Copper, Sulphuric acid எனும் அமிலத்துடன் வினைபுரிவதன் மூலம் மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

1920ம் ஆண்டு Watkin and Hill எனும் லண்டன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள அந்த எச்சரிக்கை மணி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே அதிக காலம் நீடித்துழைக்கும் பேட்டரி எனும் சாதனையுடன் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த எச்சரிக்கை மணியின் பேட்டரியில் இருந்து வெளியாகும் வோல்டேஜ் எனப்படும் மின்னழுத்தம் மிகவும் குறைந்து இருப்பதால் நம்மால் அதன் ஒலியை கேட்க முடிவதில்லை. மிகவும் மெல்லிய அளவிலேயே ஓசை எழுப்பப்படுகிறது. ஒரு முறை ஒலிப்பதற்கு 1Nano Ampere அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.இதன் சிறப்பான செயல்பாட்டை பார்த்து இரண்டாம் உலகப்போரின் போது இதில் பயன்படுத்தப்பட்ட Dry pile எனப்படும் அதே வகை பேட்டரிக்களை சில Infrared தொலைநோக்கிகளிலும் பயன்படுத்தினர்.

இந்த எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பல தலைமுறைகளைக் கடந்து நூற்றாண்டுகளைக் கடந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அது இன்னும் எவ்வளவு காலம் உழைக்கும் எப்போது நிற்கும் என்பதை அறிய இந்த தலைமுறைக்கேனும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்கவேண்டும்.