ஒரு புதிய ஆய்வறிக்கை, குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சாக்லேட் உட்க்கொள்ளும் போது இதய நோய்களுக்கான வாய்ப்பு குறையாவதாக தெரிவித்துள்ளது. சாக்லேட் நுகர்வு, இரத்த அழுத்தம் பிற இதய செயல்பாடுகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மருத்துவ பரிசோதனைகள் காட்டுகின்றன. முந்தையஆய்வுகள், சாக்லேட் உள்ளிட்ட சில உணவு வகைகள் இருதய நோய்க்கு நன்மை பயக்கும் என்று காட்டுகின்றன.
இருப்பினும், இதுநாள் வரையில் சாக்லேட் நுகர்வு, குறிப்பாக Coronary Artery எனப்படும் இரத்தக் குழாயில் ஆபத்தை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரை அறியப்படாமலேயே இருந்தது.
தற்போது சாக்லேட் உட்க்கொள்ளுதல் மற்றும் அதன் மூலம் இதய குழாய்களுக்கு ஏற்படும் நன்மை குறித்து பிரத்யேகமாக சோதனை நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்து 2,66,264 நபர்கள், ஸ்வீடனில் இருந்து 68,809 பேர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 1,216 பேர் என மொத்தம் 3,36,289 பங்கேற்பாளர்களுடன் ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.
இக்காலகட்டத்தில் 14,043இரத்தக் குழாய் நோயினால் பாதிக்கப்பட்ட்னர். 4,667 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, 2,735 பேர் மூளை பாதிப்பு மற்றும் 332 பேருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது. இவர்களில் வாரத்திற்கு ஒரு முறைக்கு குறைவாக சாக்லேட் உட்கொள்பவர்களோடு ஒப்பிடுகையில், வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்க்கான வாய்ப்பு 8%க்கும் குறைவாகவே இருப்பது தெரியவந்தது.
சாக்லேட்டில் flavanoids , methylxanthines, polyphenols and stearic acid போன்றவை இருப்பதால் இரத்தக்குழாய்களுக்குள் வீக்கத்தைக் குறைத்து Good Cholestrol எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும். குறிப்பிட்ட ஒருவகை சாக்லேட் மட்டும் அதிக நன்மை தருகிறதா, அல்லது குறிப்பிட்ட அளவு ஏதாவது உள்ளதா என்பது குறித்ததெல்லாம் இன்னும் ஆய்வு செய்யவில்லை. Coronary Artery எனும் இரத்தக் குழாயில் ஏற்படும் நோயைத் தடுப்பதற்கு சாக்லேட்டை உறுதியாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
சாக்லேட் எந்த அளவு வரை உகந்ததாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிகப்படியான சாக்லேட் கண்டிப்பாக ஆபத்து தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.