கொரோனா நோய் பரவல் காரணமாக உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் சுவாரசியமான செய்திகள் தவிர்க்கப்படுகின்றன . அந்த வகையில் 6,800 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்வெளியில் நடக்கும் அரிய நிகழ்வை நாம் தவற விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா ஆய்வகம் Neowise எனும் வால்நட்சத்திரம் பூமியை மிக அருகில் கடந்து செல்லும் என கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தது. அவற்றை வரும் சில நாட்களுக்கும் வெறும் கண்களில் கூட பார்க்க முடியும் என அறிவித்துள்ளது நாசா. அவற்றை எப்படி பார்ப்பது என்பதை தெரிந்துகொள்வதற்கு முன் வால் நட்சத்திரம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
உறைந்த வளிமண்டல வாயு, தூசு மற்றும் பாறைகளால் ஆன ஒரு பிரம்மாண்டமான பந்தைத் தான் வால் நட்சத்திரம் என்கிறோம். ஒரு வால் நட்சத்திரத்தின் அளவு சிறிய நகரம் முதல் சில நூறு கிலோமீட்டர் நீளும். அவை சூரியனை மிக அருகில் கடக்கும் போது மேற்பகுதி உருகி வால் போன்ற தோற்றத்தை உண்டாக்கும். அது சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் நமக்கு தெரிகிறது.

அப்படிப்படட மிக அரிய வானியல் நிகழ்வு நம் பூமிக்கு மிக அருகில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மூன்றாம் தேதி வியாழன் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் வந்த நியோவைஸ் வால் நட்சத்திரம் ஆகஸ்ட் மாத மத்தியில் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகிவிடும் என தெரிவித்துள்ளது நாசா.
ஜூலை 14 முதல் மாலை நேரங்களில் இதை நாம் பார்க்க முடியும். இந்த வால் நட் சத்திரத்தை பார்க்க பிரத்தியேகமாக எந்த கருவியும் தேவையில்லை. வெறும் கண்களிலேயே பார்க்கலாம் என்றும் தொடர்ந்து இருபது நாட்களுக்கு நம் கண்களுக்கு இவை தென்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.மீண்டும் 6,800 ஆண்டுளுக்கு பிறகே இந்த நிகழ்வு பூமியில் தெரியும். எனவே இந்த நிகழ்வை தவறவிடாதீர்கள்!