மனிதர்களுக்குள் செய்யப்படும் மரபணு மாற்றம் எனப்படுவது இனியும் கற்பனைக் கதையாக இருக்கப்போவதில்லை. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் மனித செல்களில் மிகவும் விலை குறைவான மற்றும் எளிதான மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிவிட்டது. Clustered Regularly Interspaced Short Palindromic Repeat அல்லது CRISPR-Cas9 என்றழைக்கப்படும் இத்தொழில்நுட்பம் மரபணு மாற்றத்தில் மிகப்பெரிய புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் ஒரு சாதாரண பாக்டீரியாவின் நோய் எதிர்ப்புத் திறனின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பாக்டிரியாக்கள் ஒரு முறையை பின்பற்றுகின்றன. அவற்றை தாக்கவரும் வைரஸின் dnaக்களை திருடி அதனை CAS எனப்படும் சுரப்பியின் மூலம் பன்மடங்காக பெருக்கி இணைத்துக் கொள்கின்றன. இந்த புதிய இணைப்பே CRISPR எனப்படுகிறது. இதன் மூலம் தாக்கவந்த வைரஸின் DNA மற்றும் RNA தகவல்களை சேமித்துக்கொள்வதால் அடுத்த முறை அதே வைரஸ் தாக்குதலை தவிர்க்கிறது.

அவை எப்படி செயல்படுகிறது என்பதை எளிமையாகக் கூறவேண்டுமென்றால் ஒரு கத்தரிக்கோளைக் கொண்டு உங்கள் மரபணுவில் தேவையான பகுதிகளை விடுத்து தேவையில்லா பகுதிகளை வெட்டிகொள்ளலாம், வேறு மரபணுக்களை ஒட்டிக்கொள்ளலாம். இந்த ஆய்வு முதன்முறையாக Dansico வில் உள்ள ஒரு உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் Rodolphe Barrangou என்பவரால் நிகழ்த்தப்பட்டது. அவை எப்படி செயல்படுகிறது என்பதை தற்போது நாம் பார்க்கலாம்.

நமது உடலில் உள்ள மரபணுக்களில் பல லட்சம் தகsல்கள் D.N.Aக்களில் பதிந்திருக்கும். ஒவ்வொரு D.N.A சுருளுக்குள்ளும் உள்ள Nucleotide களை மாற்றுவதன் மூலம் நமக்கு தேவையான மாற்றங்களை செய்ய முடிகிறது. DNAவை செயற்கையான முறையில் நாம் மாற்றினாலும் அதன் இயற்கையான திறனின் மூலம் எளிதாக அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றார் போல அது செயல்பட தொடங்கிவிடும். இரண்டு வழிமுறைகளில் நாம் மாற்றத்தை உண்டாக்கலாம். முதல் வழிமுறையில் நமக்கு தேவையில்லாத பண்புகளை மட்டும் தனியாக வெட்டியெடுப்பது. இரண்டாவது முறை நமக்கு தேவையான பண்புகளை புதிதாக சேர்ப்பது.

Crispr தொழில்நுட்பத்தின் மூலம் மலேரியாவை உண்டாக்கும் கொசுக்களிடம் இருந்து அதன் குறிப்பிட்ட DNAக்களை மட்டும் பிரிக்கலாம். தற்போது இறைச்சிக்காக உருவாக்கப்படும் உயிரினங்களை இன்னும் பெரிதாக உருவாக்குவதன் மூலம் அதிகளவிலான இறைச்சி கிடைக்கும் . பன்றிகளின் உடலில் நமக்கு தேவையான பாகங்களை உருவாக்கி மனிதர்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறோம். அதிக மகசூல் தரும் பயிர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் HIV வைரஸைக் கண்டறிந்து பாதிப்பை உருவாக்கும் குறிப்பிட்ட மரபணுவை மட்டும் பிரித்தெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். ஆனால் அந்த குறிப்பிட்ட Hiv மரபணுவை மட்டும் கண்டறிவது மிகவும் கடினமான காரியமாகவுள்ளது. இறுதியாக மனிதனைக் கூட தங்களுக்கு எற்றவாறு மாற்றம் செய்து உருவாகிக்கொள்ளும் நிலை வரும் காலம் தொலைவில் இல்லை.