இளம் டால்பின்கள் தங்கள் நண்பர்களை யோசித்து தேர்ந்தெடுக்கின்றன என்பது சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. சிந்தித்து செயல்படுதல் மனிதர்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல Bottle nose Dolphin எனப்படும் ஒரு வகை டால்பின்களுக்கும் முக்கியமானது தான் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.எதிர்கால நன்மைகளுக்காக தங்கள் இளமை காலங்களில் இந்த டால்பின்களின் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகின்றன.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் 10 வயதிற்கு உட்பட்ட டால்பின்கள் பிணைப்புகளை உருவாக்குவதற்கும், இளமைப் பருவத்தில் அவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதற்கும் மற்ற டால்பின்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை கொடுத்து அதன் மூலம் நண்பர்களை தேர்ந்தெடுக்கிறது. 30ஆண்டுகால பதிவுகளை இந்த குழு ஆய்வு செய்துள்ளனர்.
தற்போதைய ஆய்விற்காக, தாய்ப்பால் கொடுப்பதில் இருந்து 10 வயது வரையிலான இளம் டால்பின்களிடம் சேகரிக்கப்பட்ட தரவுகளில் குழு கவனம் செலுத்தியது. அவை எந்த டால்பின்களுடன் பழகுகின்றன, வயதான டால்பின்கள் இல்லாதபோது எப்படி நேரத்தை செலவிட்டன என்பதைப் பார்க்கிறார்கள். சுமார் 3 அல்லது 4 வயதுடைய, டால்பின்கள் தங்கள் தாய்மார்களின் பாதுகாப்பை விட்டு வெளியேறுகின்றன. தொடர்ந்து மாறிவரும் குழுக்களில் வாழ்கின்றன, பின்னர் பிரிந்து மீண்டும் வெவ்வேறு சேர்க்கைகளில் இணைந்து வாழ்கின்றன.
நாள் முழுவதும் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மேலாக இளம் டால்பின்கள் ஒவ்வொரு குழுவாக மாறினாலும், அவர்கள் ஒரு சில நெருங்கிய நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண் டால்பின்கள் மற்ற ஆண் டால்பின்கள் உடன் பழகவே விரும்புகின்றன. அதே போலவே பெண் டால்பின்களும் செயல்படுகின்றன. ஆனால் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு வழிகளில் தொடர்புகொள்வதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். ஆண்கள் தான் பெண்களை விட ஓய்வெடுப்பதற்கோ அல்லது நட்பான உடல் தொடர்புகளில் ஈடுபடுவதற்கோ அதிக விருப்பப்படுகின்றன. அதேசமயம் பெண் டால்பின்கள் குறைவாகவே சமூகமயமாதலில் ஈடுபடுகின்றன. இந்த தகவல்களை பார்க்கும் பொழுது உண்மையாகவே டால்பின்கள் புத்திசாலியான உயிரினம் தான் என்பது உறுதியாகிறது.