அண்டார்டிகாவில் 200 ஆண்டுகால மனித செயல்பாட்டின் பகுப்பாய்வு வருத்தமளிக்கிறது. அண்டார்டிகா அதன் தொலைதூர மற்றும் அழகிய பனிப் போர்வைகளுக்கு பெயர் பெற்றது. இது நமது கிரகத்தின் மனித கால்கள் படாத நிலங்களை கொண்ட கடைசி கண்டமாக பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளின் ஆய்வுக்குப் பிறகு, இந்த பனிக்கட்டி கண்டத்தின் மிகக் குறைவான பகுதிகள் மட்டுமே மனிதர்களால் தொடப்படாதவை என்று தெரியவந்துள்ளது.
அண்டார்டிகாவின் 99.6 சதவிகிதம் இன்னும் வளர்ச்சியடையாத வனப்பகுதியாகக் கருதினாலும், அந்த பகுதி துண்டு துண்டாக மாறியுள்ளது.
தொலைதூரமாகக் கருதப்படும் ஒரு பிராந்தியத்தில், உண்மையில் மனித செயல்பாடுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கலாம் என்பதைக் காட்டியுள்ளோம். குறிப்பாக பனி இல்லாத மற்றும் கடலோரப் பகுதியில் பல்லுயிர் பெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பொருள் வனப்பகுதியில் கண்டத்தின் முக்கியமான பல்லுயிர் தளங்கள் இல்லையென்றாலும் காடுகளையாவது பாதுகாக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
கடந்த 200 ஆண்டுகளாக அண்டார்டிகாவில் மனித செயல்பாடு குறித்த அனைத்து அறிக்கைகளையும் (2.7 மில்லியனுக்கும் அதிகமான தரவுகளின் தொகுப்பு) பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் மனித குறுக்கீடு இல்லாத அழகிய பகுதிகள் இப்போது அண்டார்டிகாவின் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளன என தெரிவித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த கடைசி இயற்கை சரணாலயங்களும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
நகரங்கள், விவசாயம் அல்லது தொழில் என முக்கியமான காரணங்கள் இல்லாமல் வெறும் ஆய்வு மற்றும் சுற்றுலா ஆகியவை மட்டுமே ஒரு கண்டத்தின் இப்பேற்ப்பட்ட நிலைக்கு காரணமாக இருப்பது கவலைக்குரியது. இந்த குறைந்துவரும் வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது. தனித்து இருந்த தெற்கு பனிப் பிரதேசமும் இப்போது மனித அத்துமீறலுக்கு ஆளாகியுள்ளது வேதனையானது..