கொரோனாவில் இருந்து எப்படி தப்பித்தன வௌவால்கள்???

Phyllostomus discolor, the pale spear-nosed bat உட்பட வேறுபட்ட ஆறு வௌவால் இனங்களிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்கள் மூலம் நடத்தப்பட ஆய்வில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இருளில் எப்படி ஒலியை பயன்படுத்தி பயணிக்கிறது போன்ற ஆராய்ச்சிகளோடு சேர்த்து மேலும் முக்கிய ஆய்வுக்கான விடைகளும் கிடைத்துள்ளன. உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் வைரஸ்களிடம் இருந்து இவை மட்டும் எப்படி தப்பித்துக் கொள்கின்றன?
காரணம் என்ன?

அதுமட்டுமல்லாமல் பறக்கும் திறன், முழுமையான இருளில் சிரமமின்றி பறக்க ஒலியைப் பயன்படுத்துதல், ஆபத்தான வைரஸ்களை கிருமிகளை சகித்துக்கொள்வது, உயிர்வாழ்வது மற்றும் புற்றுநோயை எதிர்ப்பது போன்ற சில சிறப்பான பண்புகள் இவற்றிடம் உள்ளது. ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்க்கும்போது பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மரபணு விரிவாக்கம், மரபணு இழப்பு போன்றவை முக்கிய பங்காற்றியுள்ளது.
APOBEC3 எனும் மரபணு பாலூட்டி இனங்களில் வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியில் முக்கியப் பங்காற்றுகிறது. பரிணாம வளர்ச்சியின் காரணமாக வௌவால்களில் இந்த குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிற பாலூட்டிகளில் இல்லை.மனிதர்கள் உட்பட பிற பாலூட்டிகளில் வைரஸ் நோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க இந்த ஆய்வுமுடிவு உதவும்.

வெளவால்களில் காணப்படும் இந்த தனித்துவமான மரபணு மாற்றங்களைக் கண்டறிய, ஆய்வுக்குழு முறையாக வௌவால் மற்றும் பிற பாலூட்டிகளுக்கு இடையிலான மரபணு வேறுபாடுகளைத் தேடியது. தொடர்ச்சியான அதிநவீன புள்ளிவிவர பகுப்பாய்வுகள் மூலம் APOBEC3 எனப்படும் மரபணு தான் காரணம் என தெரியவந்துள்ளது.