லேசர் எனப்படுவது ஒரு சில குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஒளியாகும். நாம் சாதாரணமாக பார்க்கும் சூரியஒளி, மின்விளக்கில் இருந்துபெறப்படும் ஒளி போன்றவற்றைப் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண ஒளியானது பல்வேறு அலை நீளங்களிலான ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும். ஆனால் லேசர் ஒளியானது ஒரு குறிப்பிட்ட அலை நீளத்திற்குள் இருக்கும் ஒளிக்கதிர்களையே பெற்றிருக்கும். இந்த தனிச்சிறப்பான பண்பிற்காக இவை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Light Amplification by Simulated Emission of Radiation ன் சுருக்கமே Laser என்றழைக்கப்படுகிறது. லேசர் ஒளி தற்காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடினமான பொருட்களில் துளையிடுதல், Optical Fibre, மருத்துவ சிகிச்சை போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கிறது.
தற்போது விஞ்ஞானிகள் லேசர் ஒளியில் பல்வேறு மேம்பாடுகளை செய்துவருகின்றனர். அவற்றின் அலைநீளத்தை சுருக்குவதன் மூலம் இன்னும் கூர்மையான லேசர் கதிர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது 10வருட உழைப்பின் பயனாக மிகவும் ஒருமுகப்படுத்தப்பட்ட அலைநீளம் கொண்ட லேசர் ஒளியை உருவாக்கியுள்ளனர். தற்போது இவர்கள் உருவாக்கியுள்ள லேசர் ஒளியலையின் அலைநீளம் 10Mega hertz. இது ஒரு உலக சாதனையாகக் கருதப்படுகிறது. அதாவது இதன் சுழற்சி ஒரு நொடிக்கு 200 ட்ரில்லியனாக இருக்கும் எனக் கருத்தப்படுகிறது. இதனால் இவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ள லேசர் கிட்டத்தட்ட 3.3 மில்லியன் கிலோமீட்டர் வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியை விட 10மடங்கு அதிகம்.
Fabry-Perot silicon Resonator மூலம் செயல்படவுள்ள இந்த லேசர் வெப்பநிலை அழுத்த வேறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இவை தற்போது சில இடங்களில் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகத் துல்லியமான அணுக் கடிகாரத்தை இதன் மூலம் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் குறைந்தது ஒரு mega hertz அளாவுக்கு அலை நீளம் உருவாக்கப்பட்டலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.