கருப்பை வாய்புற்றுநோய்க்கு உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இன்று (01.09.2022) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் 15-44 வயதுள்ள பெண்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களில் 2வது இடத்தில் கருப்பை வாய்ப்புற்றுநோய் உள்ளது. இதற்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் ’செர்வாவேக்’ தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது கருப்பை வாய்புற்றுநோய்க்கு முக்கிய காரணியாக செயல்படும் ஹியூமன் பாப்பிலோமோ நுண்கிருமிக்கு எதிராக செயல்படும். மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத்துறையின் ஆதரவுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் நிறைவு பெற்ற நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று டெல்லியில் இந்த தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த இருக்கிறார்.