Hybrid எனப்படும் கலப்பினமாக ஒரு புதிய மீன் உருவாக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகையான மீன்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான தோற்றமுள்ள மீன் அமெரிக்க துடுப்பு மீன் மற்றும் ரஷ்ய ஸ்டர்ஜன் ஆகியவற்றின் கலப்பின சந்ததியாகும். இந்த இரண்டு வகையான மீன்களும் அழியும் நிலையில் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.
அதன் முட்டைகளுக்கு பிரபலமான ரஷ்ய ஸ்டர்ஜன் மீன் மற்றும் நீண்ட வாயைக் கொண்ட அமெரிக்க துடுப்பு மீன்களும் மிகவும் பண்டைய பாரம்பரியம் கொண்டது. மிகவும் மெதுவான பரிணாம வளர்ச்சி அடைந்தன இந்த மீன்கள். மற்றும் மெதுவான பரிணாம வளர்ச்சியின் காரணமாக புதைபடிவ மீன்(Fossil Fish) என்று குறிப்பிடப்படுகின்றன. கவலைக்கிடமாக உள்ள இந்த இரண்டு மீன்களும், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் படி, அழியும் தருவாயில் உள்ளன. இரண்டு மீன் இனங்களும் அழிந்துபோகும் நிலையில் இருப்பதால் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
Gynogenesis எனப்படும் முறையில் டி.என்.ஏ வின் பங்களிப்பு இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். துடுப்பு மீன் விந்தணுவைப் பயன்படுத்தி ஸ்டர்ஜன் முட்டைகளை கருவாக்கினர். இவர்கள் எதிர்பாராத வகையில் இந்த ஆய்வு சரியாக வேலை செய்தது. கலப்பின மீன்கள் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தன. ஆராய்ச்சியாளர்கள் அவற்றை இரண்டு வகைகளாக பிரித்தனர். தாய்வழி டி.என்.ஏவை அடிப்படையாக வைத்து ஒரு வகை. இரண்டாவது வகை, ஒரே அளவிலான தாய்வழி மற்றும் தந்தைவழி டி.என்.ஏவைக் கொண்டிருந்தது, இரண்டு இனங்களுக்கும் சமமான கலவையாக இருந்தது.
“நாங்கள் ஒருபோதும் கலப்பின ஆய்வில் விளையாட விரும்பவில்லை இது முற்றிலும் தற்செயலாக இருந்தது.” என்று கூறியுள்ளார் இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர். பொதுவாகவே மனிதனால் உருவாக்கப்பட்ட கலப்பினங்கள் மலட்டுத்தன்மை வாய்ந்தவை, மேலும் அவை சுயமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே இப்போதைக்கு, இந்த மீன்கள் வெறும் விஞ்ஞான விளையாட்டாக மட்டுமே பார்க்கப்படுகிறது.