
18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டத்தில், Benjamin Franklin போன்ற ஆராய்ச்சியாளர்கள் உட்பட, பலரும் மின்னாற்றலுக்கான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். மின்சாரம் ஒர் தொடர்ச்சியான மின் ஓட்டமாக இல்லாமல், சிறு சிறு பொறிகளாகவே உருவாக்கப்பட்டு வந்தது. 1800-ன் தொடக்கத்தில், தொடர்ச்சியான, இடைவிடாத மின்னோட்டத்தை Allesandro Volta எனும் விஞ்ஞானி கண்டுபிடித்த பின்பே, அனைத்தும் மாறத்தொடங்கியது.
உலகின் முதல் பேட்டரியை கண்டுபிடித்த Allesandro Volta, இத்தாலியில் உள்ள Como நகரில் 1745-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை Filippio Volta, தாய் Donna Maddalena. உயர்குடியை சேர்ந்த இவரது குடும்பம், இவரை வழக்கறிஞராக ஆக்க ஆசைப்பட்டது. இவரோ, தன் சிறுவயதில் இருந்தே, இயற்பியலில் அதீத ஆர்வம் காட்டினார். தன் 18-வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், கல்லூரிக்குச் செல்லாமல், பிரபல விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடங்களில் பணிபுரியத் தொடங்கினார்.
பின்னர் Royal School of Como-ல் இயற்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்துக் கொண்டே, நிலைமின் ஆற்றலை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின் 1779-ல், இயற்பியல் பேராசிரியராக University of Pavia-ல் பணிபுரியத் தொடங்கினார். அங்கு அவர் தொடர்ந்து 40 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

அப்போது Galvani எனும் ஆராய்ச்சியாளர், இரு வேறு உலோகங்களை தவளையின் உடலோடு இணைத்து, அதன் மூலம் மின்சாரத்தை உருவாக்கினார். பின்னர், உலோகங்களை தவளையுடன் இணைப்பதால் தான் மின்சாரம் உருவாகிறது, எனவே விலங்குகளின் மூலம் மின்சாரம் உருவாக்கலாம் எனும் முடிவுக்கு வந்தார். ஆனால் அதை மறுத்த Volta அந்த தவளை வெறும் மின் கடத்தி தான் என்றும், மின்சாரம் உருவாவது அந்த உலோகங்களினால் தான் என்றும் நிரூபித்தார். இதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார், வோல்டா. வேதியியல் துறைச் சார்ந்த மின்னோட்டத்திற்கான ஆராய்ச்சியின் அத்தியாயம், இவர் மூலமே தொடங்கப்பட்டது.

Galvani உடன் நடந்த இச்சம்பவம் தான், உலகின் முதல் பேட்டரியை, அலெஸாண்ட்ரோ வோல்டா உருவாக்க காரணமாக அமைந்தது. Voltaic Pile எனப்படும் ஆரம்பகால பேட்டரியை உருவாக்கினார். சம்பந்தமே இல்லாத இரு வேறு உலோகங்களான Zinc மற்றும் Copper தகடுகளை, உப்பு நீரால் நனைக்கப்பட்ட துணிகளுக்கு இடையில், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினார். அந்த இரண்டு உலோகங்களின் முனைகளையும் ஒன்றினைக்கும் போது மின்சாரம் உருவானது. அதுவும், இடைவிடாமல் தொடர்ச்சியாக வெளிவந்தது.

1788-ஆம் ஆண்டு March 20-ஆம் தேதி, Royal Society of London-ன் தலைவருக்கு, தன்னுடைய கண்டுபிடிப்பை கடிதத்தின் மூலம் தெரிவித்தார். பின்னர் இது உலகம் முழுவதும் பரவி, பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. Humpry Davy, Michael Faraday போன்றவர்களுக்கு தூண்டுகோளாக அமைந்தது, Volta-ன் கண்டுபிடிப்பு. Napolean அவர்களால் Paris-கு அழைக்கப்பட்டு, அங்குள்ள National Institute of France-ல் பல உரைகளை நிகழ்த்தினார். அது மட்டுமல்லாமல், மீத்தேன் வாயுவை கண்டுபிடித்ததும், இவர் தான்.

1809-ல் Royal Institute of Netherland-ன் கவுரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இவரது இந்த கண்டுபிடிப்பிற்கு பின், இவரது இறுதி 25 ஆண்டுகளுக்கு, வேறு எந்த வகையான ஆராய்ச்சியிலும், கண்டுபிடிப்புகளிலும் Volta ஈடுபடவில்லை. 1827-ஆம் ஆண்டு தன் 82-ஆம் வயதில், March 5-ஆம் தேதி அவரது பண்ணை வீட்டில் காலமானார், அலெஸாண்ட்ரோ வோல்டா.

இவருக்கான நினைவுச்சின்னங்கள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இவரது கண்டுபிடிப்புகள் பலவற்றையும் ஒருங்கினைத்து, அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலிய நாட்டின் 10,000 Lira மதிப்புள்ள ரூபாய் நோட்டில், இவரது படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு பின்பும், இவரது பெயர் அழியா வண்ணம், வோல்ட் எனும் இவரது பெயரே, மின் அழுத்தத்திற்கான அலகாக சூட்டப்பட்டுள்ளது.




