
43ஆண்டுகள் ஆகிறது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை ஆராய்வதற்காக Voyager எனும் விண்கலத்தை அனுப்பி. கடந்த இரு நூற்றாண்டுகளாய் வியாழனும் அதன் வித்தியாசமான வளையங்களும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. முதலில் அதை ஆராய்வதற்காகவே 1977ல் Voyager 1 மற்றும் voyager 2 விண்கலங்கள் ஏவப்பட்டது. Jupiter, Saturn, Uranus, Neptune, போன்ற நமக்கு அப்போது பரிட்சயம் இல்லாத கோள்களைப் பற்றி நாம் அறியாத பல தகவல்களை Voyager நமக்கு அனுப்பின. வியாழன் சனி போன்ற பெரும் கோள்களையே ஆராய அனுப்பினர் நாசா விஞ்ஞானிகள். அவற்றை ஆராய்ந்த பின் அவற்றின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மேலும் பல ஆயிரம் மைல்களையும் எளிதாகக் கடந்தது.

தற்போது வரை Voyager 1 விண்கலம் 13 பில்லியன் மைல் (20ஆயிரம் கோடி கிலோமீட்டர்) தொலைவைக் கடந்துள்ளது. Voyager 2, 11 பில்லியன் மைல் (17 ஆயிரம் கோடி கிலோமீட்டர்) தொலைவைக் கடந்துள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் துணைக் கோள்கலான Titanஐயும், Encladeus பற்றியும் முதல் தகவல்களை எடுத்தனுப்பியது. சனி கோள் உருவான வளையங்களுக்குக் காரணமான ஈர்ப்பு விசையின் இழுவையைப் பற்றியும் கண்டறிந்து கூறியது.
சூரியனில் இருந்து ஒளியை மட்டும் நாம் பெறுவதில்லை, சூரியனில் இருந்து வெளிப்படும் சூரியப்புயலின் மூலம் உருவாகும் காந்தப்புலம், மின் அயனிகள், Plasma துகள்கள் போன்றவையும் அடங்கியிருக்கும். இது ஒரு குமிழ்போல நம் சூரியக்குடும்பத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனை Heliosphere என்றழைக்கிறோம். அதன் முடிவே சூரிய குடும்பத்தில் எல்லையாகக் கருதப்படுகிறது. நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட பகுதிகளைத் தாண்டிய Interstellar Space எனும் பகுதிகளுக்குள் 2012ம் ஆண்டுஆகஸ்ட் 25ம் தேதி நுழைந்தது Voyager1. விரைவில் Voyager 2வும் Heliopsphere ஐ கூடிய விரைவில் கடந்துவிடும்.

மேலும் Voyagerன் சிறப்பம்சமாக அதில் உள்ள Golden Record பார்க்கப்படுகிறது. தங்கமுலாம் பூசப்பட்ட இந்த குறுந்தட்டில் பூமியில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை எடுத்துறைக்கும் விதமாக பல்வேறு புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Cornell Universityஐச் சேர்ந்த Carl Sagan என்பவரது தலைமையின் கீழ் இந்த புகைப்படங்கள் தேர்வுசெய்யப்பட்டன. உலகின் 55 மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டன. அதில் இந்திய மொழிகளான ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, ஒரியா, உருது போன்ற மொழிகளும் அடங்கும். மேலும் பூமியின் பன்முகத்தன்மையை விளக்கும் விதமாக பல்வேறு விலங்கினங்கள், காற்று, மழை, போன்றவற்றின் சத்தங்களும் சேமிக்கப்பட்டுள்ளன. பூமியில் பின்பற்றப்படும் அடிப்படை இயற்பியல் மற்றும் கணிதவிதிகளுடன் பூமியின் இருப்பிடமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீத்தோவன், மொசார்ட் போன்றவர்களின் இசை கோர்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது. Voyager வேற்றுகிரக உயிரினத்திடம் ஒருவேளை கிடைத்து அதனைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மைப்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புகள் அமையலாம்.

3,800கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது Voyager. Voyagerல் இருந்து பதிவுசெய்யப்படும் தகவல்கள் 160 பைட் வேகத்தில் பூமிக்கு அனுப்பப்படுகிறது. Deep Space Network அல்லது DSN எனும் தொழில்நுட்பத்தின் மூலம் அவை சேமிக்கப்படுகிறது. கடந்த 36 ஆண்டுகளில் பல புதிய தகவல்களை எடுத்தனுப்பியுள்ளது. பல கோள்களையும் அவற்றின் துணைக்கோள்களைப் பற்றியும் வெளிப்புற சூரியக்குடும்பத்தின் சூழ்நிலைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளமுடிந்தது. அதற்கான எரிபொருள் தற்போதைக்கு தேவையான அளவு இருப்பதால் அவற்றின் பயணத்தை விஞ்ஞானிகள் நிறுத்தப்போவதில்லை. Voyagerல் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக பழுதடையத் தொடங்கினாலும் 2025ம் ஆண்டுவரை அவை தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்
தற்போது கூட Voyager 1 மற்றும் 2 எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பது போன்ற பல துளியை தகவல்களை இந்த இனையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம் https://voyager.jpl.nasa.gov/mission/status/









