சி.எஸ்.கே. வீரர்களுக்கு தற்போது எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி, கொரோனா பரவல் காரணமாக, வரும் 19-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் 10-ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இதற்காக துபாய் சென்ற வீரர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சி.எஸ்.கே. அணியில் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஊழியர்கள் உட்பட, 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா உறுதியானதையடுத்து, சி.எஸ்.கே. அணியினர் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை நீட்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று அணியினருக்கு மீண்டும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன் முடிவில், யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது, 3-ஆம் தேதி எடுக்கவிருக்கும் அடுத்தக்கட்டப் பரிசோதனையிலும், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானால், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் சி.எஸ்.கே. வீரர்கள், தங்களது பயிற்சியை ஆரம்பிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, சி.எஸ்.கே. ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.




