ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மோசமாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் கேதார் ஜாதவை, நகைச்சுவை நடிகர் சதீஷ் கிண்டல் செய்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 167 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
இதனால் சென்னைக்கு வெற்றி எளிதில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் 21 பந்துகளில் 39 ரன்கள் தான் தேவை என்ற நிலையில் கேதார் ஜாதவ் களமிறங்கினார். 20 ஓவர் போட்டியில் இந்த ரன்களை அடிப்பது மிக எளிதான விஷயம் என்று கருதப்பட்டது. ஆனால் கேதார் ஜாதவின் ஆமை வேக ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை தழுவியது. 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களின் சாபத்துக்கு உள்ளானார்.
மேலும் அவரைக் கிண்டல் செய்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
அதேபோல் நகைச்சுவை நடிகர் சதீஷும், கேதார் ஜாதவை கிண்டல் செய்துள்ளார்.
கேதார் ஜாதவ்வை கிண்டல் செய்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ரொம்ப நன்றி கேதார் ஜாதவ், நல்லா வருவீங்க. பிளீஸ் தோனி…. அணிக்கு 10 பேர் கூடபோதும்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சதீஷின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்தப் பதிவை ஏராளமானோர் லைக் செய்தும், ரீட்விட் செய்தும் வருகின்றனர்.




