இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள்கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிட்னி:
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆரம்பம் முதலே அதிரடியாய் விளையாடி ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 374 ரன்கள் எடுத்தது.
375 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களுடன் தடுமாறியது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 21 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுலும் பெரிதாக சோபிக்கவில்லை.தவானுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா சிறப்பாக ரன்களை எடுக்க,மறுமுனையில் தவான் அரைசதம் கடந்தார்.இந்த ஜோடி அதிரடியாக விளையாடி 100 ரன் பாட்னர் ஷிப் அமைத்தது.35 வது ஓவர் வீசிய ஜாம்பா தவானை 74 ரன்களில் வெளியேற்ற,சிறிது நேரத்தில் ஹர்திக் பாண்டியாவும் 90 ரன்களில் நடையைக்கட்டினார்.கடைசி நேரத்தில் ஜடேஜா மற்றும் சைனி ஓரளவு போராட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது,ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களும்,ஹசல்வுட் 3 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.
66 பந்துகளில் 105 ரன்கள் குவித்த ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.