ரபடா மற்றும் அஷ்வினின் சிறந்த பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி 138 ரன்களில் சுருண்டது.
ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 185 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்றது.
விக்கெட் இழப்புகள் பின்வருமாறு:
15-1 (ஜாஸ் பட்லர்- 2.3)
56-2 (ஸ்டீவன் ஸ்மித்- 8.1)
72-3 (சஞ்சு சாம்சன்- 10.3)
76-4 (லோம்ரர் 11.2)
82-5 (ஜெய்ஸ்வல்-12.1)
90-6 (ஆண்ட்ரியோ டை- 13.5)
100-7 (ஜோப்ரா ஆர்ச்சர்- 14.5)
121-8 (ஸ்ரேயாஷ் ஐயர்- 17.2)
136-9 (ராகுல் திவாதியா- 19.1)
138-10 ( வருண் ஆரோன் -19.4)
டெல்லி அணி சார்பில் ரபடா 3 விக்கெட்களும்,அஸ்வின் மற்றும் ஸ்டொய்னிஸ் தலா 2 விக்கெட்களும்,நோர்க்கியா,அக்சார் பட்டேல் மற்றும் ஹர்சல் பட்டேல் தலா ஒரு விக்கெட்களை எடுத்து இருந்தனர்.
ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் லோம்ரர் போன்ற மிக முக்கிய விக்கெட்களை கழட்டிய ரவி அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.