ஸ்டொய்னிஸ்,ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்காக வழங்கியது டெல்லி அணி
டெல்லி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து தொடக்க வீரர்களாக டெல்லி அணி சார்பில் பிரித்திவி சா,தவான் களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே சிறப்பாக ஆர்ச்சர் பந்து வீசி தொடக்க வீரர்கள் பிரித்திவி சா,தவான் விக்கெட்களை தூக்க,மறுமுனையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி நடையை கட்டினர்.
டெல்லி அணி 11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து இருந்தது.ஸ்டொய்னிஸ் மட்டும் ஒரு பக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு இருக்க,அவருடன் இணைந்த ஹெட்மயர் ஆன்ட்ரியோ டை வீசிய 13 வது ஓவரில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார்.ஸ்டொய்னிஸ்(39 ரன்கள்,30 பந்துகள்) அடுத்த ஓவர் வீசிய ராகுல் திவாதியா பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, டெல்லி அணி 14 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 111 ரன்கள் பெற்று இருந்தது.தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ஹெட்மயர் டை வீசிய 16 வது ஓவரில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர்களை தெறிக்கவிட,அடுத்து .தியாகி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து அடுத்த பந்தே அவுட் ஆகி 45 ரன்களில் வெளியேறினார்.
டெல்லி அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 159 ரன்களை கடக்க,அடுத்து களம் இறங்கிய அக்சார் பட்டேல் டை பந்தில் 2 பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து அதே ஓவரில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார்.ஆர்ச்சர் போட்ட கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து1 விக்கெட் எடுக்க,20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழந்து 184 ரன்கள் எடுத்து,ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்காக வழங்கியது.