தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடியால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
சிட்னி:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மேத்யூ வைட் மற்றும் ஷார்ட் களமிறங்கினர். மேத்யூ வைட் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்த,மறுமுனையில் ஷார்ட் நடராஜன் வீசிய 5 வது ஓவரில் 9 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வைட் 58 ரன்களில் நடையைக்கட்ட,ஆஸ்திரேலியா அணி 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் பெற்று இருந்தது.அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்,மேக்ஸ்வல் மற்றும் ஹென்ரிக்ஸ் தன் பங்கிற்கு ரன்களை குவித்து வெளியேறினர்.20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 எடுத்து இருந்தது.
ஸ்டோனிஸ் மற்றும் சாம்ஸ் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
195 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் கே.எல்.ராகுல் உள்புகுத்தனர்.சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடி 50 ரன்கள் பாட்னர் ஷிப் அமைத்து கொடுத்தனர்.அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல்,டை வீசிய 6 வது ஓவர் முடிவில் 30 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் அரைசதம் அடித்து 52 ரன்களில் வெளியேற,சஞ்சு சாம்சன் வந்த வேகத்தில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து 15 ரன்களில் நடையைக்கட்டினார்.அடுத்து களமிறங்கிய விராட் கோலி வேகம் எடுத்து ரன் மழையை பொழிய,இந்திய அணி 15 ஓவர்களில் 140 ரன்களை கடந்து இருந்தது.அணியின் எண்ணிக்கை 149 ஆக இருக்கும் போது 40 ரன்களில் கேப்டன் விராட் கோலி அவுட் ஆனார்.கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 டி-20 கொண்ட தொடரில் 2 ல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
22 பந்துகளில் 42 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.