தோனி, அமபயரை மிரட்டியது அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பர் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் கேப்டன் தோனி பால் ரெய்ஃபெல்லை மிரட்டினார் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐதராபாத் அணி நேற்றைய போட்டியில் 11 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அப்போது சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஷெர்துல் தாக்கூர் ஓவரின்போது, ஐதராபாத் வீரர் ரஹீத் கான் பேட்டிங் செய்தார்.
இரண்டு பந்துகளை ஷெர்துல் தாக்கூர் தொடர்து வைடாக வீசியபோது, அம்பயர் சிக்ஸர் அளிக்கத் தயாரானார்.
ஆனால் அந்த நேரம்பார்த்து தோனி அம்பயரைப் பார்த்து எதுவோ சொல்லியதாகத் தெரிகிறது. அதனால் அம்பயர் கைகளை கீழே போட்டார்.
தற்போது இதுகுறித்து விம்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் போட்டியின் போது வீரர்கள் ஆக்ரோசமாக இருப்பது சகஜம் என்று தோனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்;.




