தோனியின் 5 வயது மகளுக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.
நடப்பு ஐபிஎல் -20 தொடரில் சென்னை அணி இரு மேட்சுகளில் மட்டுமே ஜெயித்தது. மற்ற நான்கில் தோற்றுள்ளது. சமீபத்தில் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் சென்னை ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையின் அணி வீரர்களின் செயல்பாடு குறித்து முன்னாள் விஅர் சேவாக் கடுமையாய் விமர்சித்துள்ளார். அதில் சமீபத்திய போடியில் சென்னை அணி ஜெயித்திருக்க வேண்டியது ஆனால் ஜடேஜா மற்றும் ஜாதவின் மந்தமான ஆட்டத்தால் அணி தோற்றது. சென்னை அணி வீரர்கள் அணிக்காக விளையாடுவது அரசுவேலை போலக் கருதுகிறார்கள். விளையாடாவிட்டாலும் அவர்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என்று நினைக்கிறார்கள் எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை அணி தொடர் தோல்வி அடைந்து வருவதால் கேப்டன் தோனியின் மகள் ஷிவா (5 வயது ) சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, இதுபோன்ற மிரட்டல்களுக்கு கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
அணியின் செயல்பாட்டுக்கு ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று தோனி, ஜாதவ், ஜடேஜா உள்ளிட்டோருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.