இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நேற்று முன்தினம் சென்னையில் இந்தப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து. இதில் தொடக்க ஆட்டக்காரரான டோம் சிப்லே 87 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கேப்டன் ஜோ ரூட் நேற்று இரட்டை சதமடித்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்பு வந்த போப், ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 34, 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 600 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி விரைவாக எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து 578 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, ஷபாஸ் நதீம் தலா இரண்டு விக்கெடை எடுத்தனர்.




