ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று வடிவ இந்திய அணிகளில் இருந்தும் ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரோஹித் சர்மாவிற்கு தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் ஐ.பி.எல் தொடரில் இரண்டு போட்டிகளில் பங்கேற்க வில்லை.இந்த நிலையில் அடுத்த போட்டியில் இருந்து அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.தற்போது ஐ.பி.எல் தொடர்ந்து முடிவுக்கு வரும் தருவாயில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. ஆனால் இதில் எந்த ஒரு வடிவிலும் ரோஹித் சர்மா சேர்க்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்பியது.பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரோகித் சர்மாவின் உடல் நிலை தகுதி குறித்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் அதை அறிந்து கொள்ள ரசிகர்களுக்கு உரிமை உண்டு என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் துவங்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், ரோகித் சர்மாவை அதிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் என்ன என்றும்,மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பயிற்சியில் அவர் ஈடுபட்ட பொழுதும் அவருக்கு என்னதான் காயம் ஏற்பட்டது என்றும் அவர் கேட்டுள்ளார்.அதனை தொடர்ந்து காயம் காரணமாக பஞ்சாப் அணியில் கடந்த இரு போட்டிகளில் பங்கேற்காத மயங்க் அகர்வாலுக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் ரோகித் சர்மாவிற்கு இடம் வழங்கவில்லை என்பதையும் சுனில் கவாஸ்கர் சுட்டி காட்டியுள்ளார்.